நவதானிய சுண்டல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு, வெள்ளை காராமணி, பச்சைப்பயறு, காய்ந்த மொச்சை, சிவப்புக் காராமணி, பட்டாணி, கறுப்புக் கொண்டைக்கடலை, வெள்ளைக் கொண்டைக்கடலை, சோயா - ஒவ்வொன்றும் 1/4 கப்
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
4. எள்ளு - 1/4 கப்
5. பெருங்காயம் - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. அனைத்துத் தானியங்களையும் நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பீனர் ஊற வைத்தத் தானியங்களைச் சுத்தம் செய்து வேகவைக்கவும்.
3. வெறும் வாணலியில் எள்ளையும், காய்ந்த மிளகாயைச் சிறிது எண்ணெயிலும் வறுத்துக்கொண்டு, எள்ளு, மிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், கடுகு, பெருங்காயம் தாளித்து, வேகவைத்த தானியங்களைச் சேர்த்துக் கலந்து, அரைத்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.