சோயா பீன்ஸ் சுண்டல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்
2. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
3. எண்ணெய் - 1 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
5. பெருங்காயம் - 2 சிட்டிகை
6. கருவேப்பிலை - 1 கொத்து
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
2. மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்குத் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. வேக வைத்த சோயா பீன்சைத் தண்ணீர் வடித்துத் தாளிசத்துடன் சேர்த்துக் கிளறவும்.
5. பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.