ஜவ்வரிசி சுண்டல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
5. கடுகு - 3/4 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
7. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
8. கறிவேப்பிலை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முதல் நாள் இரவில் ஜவ்வரிசியை ஊற வைக்கவும்.
2. பாசிப்பருப்பை வாணலியில் போட்டு இலேசாகப் பொன்னிறமாக வரும் வரை வறுத்து, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
3. பருப்பு நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக எடுத்து வைக்கவும்.
4. முதல் நாள் ஊற வைத்த ஜவ்வரிசியை நல்ல நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
5. பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிப்பதற்குக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
7. பிறகு, அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்தவும்.
8. பின்பு அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பைச் சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
9. பின்னர் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.