வேர்க்கடலை சுண்டல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை வேர்க்கடலை - 1 கப்
2. தேங்காய் - 1/2 மூடி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
6. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வேர்க்கடலையை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
4. வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு, தாளிசம் சேர்த்து கிளறவும்.
5. துருவி வைத்துள்ள தேங்காயைப் போட்டுச் சில நிமிடம் பிரட்டி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.