தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பட்டாணி – 1/2 கப்
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
4. துருவிய மாங்காய் – 1/2 கப்
5. துருவிய காரட் – 1/2 கப்
6. துருவிய தேங்காய் – 1/2 கப்
7. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 1/4 கப்
8. பெருங்காயர்த்தூள் – 2 சிட்டிகை
9. எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
10. கடுகு – 1/2 தேக்கரண்டி
11. உளுந்து – 1 தேக்கரண்டி
12. கருவேப்பிலை – 1 சிறிது
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பட்டாணியை முதல் நாள் இரவில் தேவையான அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.
2. மறுநாள், அத்தண்ணீரை வடித்துவிட்டு, அதன் பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நான்கு விசில்கள் வேக விடவும்.
3. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.
4. மற்றப் பொருட்களைத் தயாராக வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
6. வெங்காயம், பட்டாணி மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
7. இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்பு இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.