பட்டாணி உருளை சுண்டல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப் பட்டாணி - 250 கிராம்
2. உருளைக்கிழங்கு - 3 எண்ணம்
3. குடை மிளகாய் - 1 எண்ணம்
4. கேரட் (துருவியது) - 1/2 கோப்பை
5. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
6. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
6. தக்காளி (அரைத்த விழுது) - 1/2 கோப்பை
7. மிளகாய்த்தூள் - 1 கரண்டி
8. மசாலாத் தூள் - 1/4 கரண்டி
9. மல்லித்தூள் - 1/4 கரண்டி
10. கரம் மசாலாத் தூள் - 1/4 கரண்டி
11. மஞ்சள் தூள் - 1/4 கரண்டி
12. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அலங்கரிக்க:
15. பெரிய வெங்காயம் - 1 எண்ணம் (பொடியாக நறுக்கவும்)
16. தக்காளி - 1 எண்ணம் (விதை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
17. கேரட் துருவல் - 2 மேசைக்கரண்டி
18. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. வெள்ளைப் பட்டாணியைக் கழுவி, தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைத்துப் பின்னர் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
2. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
3. ஊற வைத்த பட்டாணியுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பின் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
6. பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்
7. பின் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்
8. தக்காளி மசிந்து சுருண்டு வரும் வரை நன்றாக வதக்கவும்.
9. பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், மல்லித்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
10. மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்கு கிளறவும்
11. அதன் பின்பு 1/4 கோப்பை தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
12. பின் மூடி வைத்து 5 நிமிடங்கள் வரை குறைவான நெருப்பில் வைத்து வேக விடவும்.
13. அவ்வப்போது திறந்து கிளறி விடவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக வந்ததும் இறக்கவும்.
14. அதன் பிறகு, அலங்கரிக்க கொடுத்துள்ள பொருட்களான நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், நறுக்கிய மல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.