பட்டாணிப் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப் பட்டாணி – 1 கப்
2. சின்ன வெங்காயம் – 1/4 கப்
3. பூண்டு – 2 பல்
4. சோம்பு – 1/2 தேக்கரண்டி
5. தக்காளி – 2 எண்ணம்
6. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை – சிறிது
9. எண்ணெய் – தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்.
2. மறுநாள் காலை வேகவைத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சோம்பு போட்டு சிவக்க வதக்கவும்.
4. அத்துடன் பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வதங்கிய பின்பு தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி, வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
6. அனைத்தும் சுருண்டு வரும் வரை நன்கு வதக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.