மசாலா மொச்சை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மொச்சை – 200 கிராம்
2. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
3. இஞ்சிப் பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
4. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6. கடலை மாவு – 3 தேக்கரண்டி
7. கடுகு – 1தேக்கரண்டி
8. சோம்பு – அரை தேக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மொச்சையைத் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. வேக வைத்த மொச்சையைத் தண்ணீர் வடித்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கடலை மாவு போட்டு சிறிது எண்ணெய் விட்டுப் பிசறி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
5. அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. பின்பு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. அத்துடன் ஏற்கனவே பிசறி வைத்திருக்கும் மொச்சையைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.
8. கடைசியாக அதைக் கிளறிவிட்டு இறக்கவும்.
குறிப்பு: காய்ந்த மொச்சையாக இருந்தால் முதல்நாள் இரவில் ஊறவைத்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.