தேங்காய், மாங்காய், சோள சுண்டல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் - 1 மூடி
2. மாங்காய் (சிறியது - புளிப்பில்லாதது) - 1 எண்ணம்
3. சோளம் (ஸ்வீட் கார்ன்) - 3/4 கப்
4. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
7. வெள்ளரிப்பிஞ்சு - 1 எண்ணம்
8. எலுமிச்சை பழம் - பாதி
9. சிறிய வெங்காயம் - 50 கிராம்
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரத்துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
3. வெட்டி வைத்தவற்றுடன் இனிப்புச் சோளம், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும்.
4. கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
5. மேலே பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைத் தூவவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.