வெஜிடபுள் சோமாஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக் கிழங்கு - 250 கிராம்
2. காரட், பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
3. பல்லாரி வெங்காயம் - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
5. இஞ்சி - சிறிது
6. பச்சைப்பட்டாணி - 1/4 கப் (உரித்தது)
7. மைதா மாவு - 1/2 கிலோ
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.
செய்முறை:
மசாலா செய்முறை:
1. உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
2. நறுக்கிய காரட்,பீன்ஸ், உரித்த பட்டாணி எல்லாவற்றையும் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
3. இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.
4. வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, சோம்பு(பெருஞ்சீரகம்)போட்டு தாளித்து அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
5. அத்துடன் வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கைப் போட்டு இறக்கவும். மசாலா தயார்.
சோமாஸ் செய்முறை:
1. மைதாவுடன் சிறிது உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
2. பின் சப்பாத்தி போல் சிறியதாகத் தேய்த்து அதன் நடுவில் மேலே மசாலாவை எலுமிச்சம்பழ அளவு உருட்டி வைத்து முக்கோணமாகவோ அல்லது இரண்டாக மடித்தோ வைத்து ஓரங்களை ஒட்டி விடவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடித்து வைத்திருக்கும் சோமாஸ்களைப் போட்டு பொறித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.