மைதா போண்டா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு – 1 கப்
2. இட்லி மாவு – 1 /2 கப்
3. பெரிய வெங்காயம் (சிறிய அளவில்) – 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
5. கருவேப்பிலை – சிறிது
6. மல்லித்தழை – 4 எண்ணம்
7. சோடா உப்பு – சிறிது
8. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கியவைகளை மைதா மாவு, இட்லி மாவு, உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
3. இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தை விட சிறிது குழைவாகப் பிசைந்து கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.