உருளை மெதுவடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 500 கிராம்
2. கடலை மாவு - 150 கிராம்
3. அரிசி மாவு 150 கிராம்
4. நல்லெண்ணெய் - 300 மி.லி.
5. கிஸ்மிஸ், முந்திரிப் பருப்பு - 25 கிராம்
6. இஞ்சி - 20 கிராம்
7. மிளகாய் - 20 கிராம்
8. ஓமம் - 20 கிராம்
9. பெருங்காயத் தூள் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்துத் தோல் நீக்கி மசிக்கவும்.
2. மசித்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பிசையவும்.
3. இஞ்சியைத் துருவியும், மிளகாயைச் சிறு துண்டுகளாக்கியும் சேர்க்கவும்.
4. கிஸ்மிஸ், முந்திரிப் பருப்பு,ஓமம் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவைகளைத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
5. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
6. வாணலியில் நல்லெண்ணெய்யைக் காய வைத்து அதில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளை வடை போல் தட்டிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.