ஜவ்வரிசி வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி - 300 கிராம்
2. தயிர் - 200 மி.லி
3. மிளகாய் - 3 எண்ணிக்கை
4. இஞ்சி - சிறிது
5. காயம் - சிறிது
6. நல்லெண்ணெய் - 300 கிராம்
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஜவ்வரிசியை மாவு போகக் களைந்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
2. பின்னர் உப்பு, காயம் சேர்த்துத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. அரைத்த மாவில் மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயந்ததும், மாவை வடை போல் தட்டிப் போட்டு எண்ணெய்யில் வேகவிட்டு எடுக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.