மசாலா பருப்பு வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலை பருப்பு - 200 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. மிளகு - 1/2 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. கடலைப் பருப்பை 4 முதல் 5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2. ஊற வைத்த கடலைப்பருப்பில் எட்டில் ஒரு பங்கைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஊற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. அரைத்த பருப்புடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சோம்பு, மிளகு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. நன்கு கெட்டியாக ஆனதும், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தனியாக எடுத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவுக் கலவையை எடுத்து, வட்டமாகத் தட்டி, எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.