கீரை வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உளுத்தம்பருப்பு - 250 கிராம்
2. பொடியாக நறுக் கிய கீரை - ஒரு கப்
3. இஞ்சி - சிறிய துண்டு
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. எண்ணெய் - 500 மி.லி
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து வடிகட்டி, அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும்.
2. கீரையை நன்கு கழுவிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. கீரையைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
4. கடாயில் எண்ணெயைக் காய வைத்து மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.