வாழைப்பூ வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ -1 எண்ணம்
2. கடலை பருப்பு - 150 கிராம்
3. இஞ்சி - சிறிய துண்டு
4. பூண்டு - 4 பல்
5. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
6. சின்ன வெங்காயம் -6 எண்ணம்
7. சோம்பு -1தேக்கரண்டி
8. உப்பு -தேவையான அளவு
9. கருவேப்பில்லை - சிறிது.
செய்முறை:
1. முதலில் வாழைப்பூவைப் பிரித்துத் தனியாக நறுக்கி வைக்கவும்.
2. கடலை பருப்பை 2 தேக்கரண்டி அளவு தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதி கடலை பருப்பு, சோம்பு, பூண்டு, இஞ்சி, உப்பு, மிளகாய் இவற்றைச் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. தனியாக வைத்த கடலை பருப்பு, அரைத்த வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கருவேப்பில்லை இவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4. உப்பு, காரம் சரி பார்த்து, பின் அதைச் சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
5. உருட்டி வைத்த உருண்டைகளை வடை தட்டி, சூடான எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.