பீட்ரூட் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் - 1 எண்ணம்
2. துவரம் பருப்பு - 100 கிராம்
3. கடலைப்பருப்பு - 50 கிராம்
4. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. இஞ்சி - சிறு துண்டு
8. பூண்டு - 4 பல்
9. வெங்காயம் - 1 எண்ணம்
10. உப்பு - தேவையான அளவு
11. கொத்தமல்லி - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. துவரம் பருப்பு, கடலைப் பருப்பைத் தண்ணீரில் குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பீட்ரூட்டைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
3. வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஊறவைத்த பருப்புடன் மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைக்கவும்.
5. அரைத்த விழுதுடன் பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான நெருப்பில் வைத்துக் கொண்டு பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.