அவல் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் – 150 கிராம்
2. கடலை மாவு – 100 கிராம்
3. சோம்பு – 1தேக்கரண்டி
4. சின்ன வெங்காயம் - 100 கிராம்
5. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
6. கறிவேப்பிலை – 1கொத்து
7. மல்லித்தழை – சிறிது
8. உப்பு – தேவையான அளவு
9. நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் அவலைச் சுத்தம் செய்து சுடுநீர் சிறிது ஊற்றி ஊற வைக்கவேண்டும்.
2. ஊற வைத்த அவலுடன் கடலைமாவு, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சோம்பு, உப்பு ஆகிய பொருள்களைச் சிறிது சூடான எண்ணெய் விட்டுத் தேவையான தண்ணீர் சேர்த்து வடைமாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
3. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிதமான நெருப்பில், உருண்டைகளை எடுத்து வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் போடவும்.
5. வடை இருபுறமும் வெந்து பொன்நிறமாக வந்தவுடன் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.