தக்காளி பஜ்ஜி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 200 கிராம்
2. அரிசி மாவு - 100 கிராம்
3. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
4. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
6. தக்காளி - 2 எண்ணம்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
9. சிகப்பு நிற பஜ்ஜி பவுடர் - சிறிது.
செய்முறை:
1. தக்காளியை வட்டவடிவமாக நறுக்கி வைக்கவும்.
2. கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, பஜ்ஜி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளியைக் கலக்கி வைத்த மாவில் மூழ்க வைத்து எண்ணெய்யில் போட்டு வேகவும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.