உளுந்து வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உளுந்தம் பருப்பு - 300 கிராம்
2. வெங்காயம் - 50 கிராம்
3. மிளகாய் - 5 எண்ணம்
4. இஞ்சி - சிறிது
5. மிளகு - 20 கிராம்
6. கருவேப்பிலை - தேவையான அளவு
7. மல்லித்தழை - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மசாலா செய்முறை:
1. உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சிறிது பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து பொங்கி வரும்படியாக அரைத்து எடுக்கவும்.
2. வெங்காயம், மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை, மிளகு சேர்த்துப் பிசைந்து விடவும்.
3. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
4. மாவை சிறிது எடுத்து ஒரு இலையில் வைத்துத் தட்டி நடுவில் ஒரு துளையிட்டு காய்ந்த எண்ணெய்யில் வேக விடவும்.
5. பொன்னிறமாக வந்தவுடன் அதைக் கரண்டி அல்லது கம்பியின் துணையுடன் எடுக்கவும்.
குறிப்பு:உளுந்த வடை ஒரு மேஜைக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.