கோஸ் மசால் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை பருப்பு - 1 கப்
2. துவரம் பருப்பு -3/4 கப்
3. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
4. கோஸ் -150 கிராம்
5. வெங்காயம் -2 எண்ணம்
6. பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், கோஸ் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய் வற்றல் என மூன்றையும் சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
3. ஊற வைத்த பருப்புகள், மிளகாய் வற்றல் ஆகியவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த விழுதுடன் நறுக்கி வைத்த கோஸ், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பிசையவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வடையாகத் தட்டிப் போட்டுப் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.