பச்சைபயறு வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முளைகட்டிய பயறு - 1 கோப்பை
2. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கோப்பை
3. மிளகு - 1/4 தேக்கரண்டி
4. சோம்பு - 1/4 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முளைகட்டிய பச்சைப் பயறுடன் மிளகு, உப்பு, சோம்பு சேர்த்துக் கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.
2. அரைத்த மாவில் வெங்காயத்தைச் சேர்த்துப் பிசையவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.