கோஸ் வடை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உளுத்தம்பருப்பு - 1 கப்
2. கோஸ் - 1 கப்
3. இஞ்சி - 1 துண்டு
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
2. கோஸ், இஞ்சி, மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. அரைத்து வைத்திருக்கும் மாவுடன் நறுக்கி வைத்திருக்கும் கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4. பிசைந்த மாவை மெல்லிய வடைகளாக தட்டி வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தட்டிய வடைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.