உருளைக்கிழங்கு போண்டா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கப்
2. சோடா மாவு - 1 சிட்டிகை
3. எண்ணெய் - தேவையான அளவு
4. உப்பு - தேவையான அளவு
மசாலா செய்திட
5. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
6. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
7. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
8. இஞ்சி - 1 துண்டு
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
12. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்து வைக்கவும்.
2. வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
5. அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
7. கிளறிய மசாலா ஆறியதும் அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
8. கடலை மாவுடன் சிறிது உப்பு, சோடா மாவு, தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.