கார வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 1/2 கப்
2. கோதுமை மாவு – 1/2 கப்
3. அரிசி மாவு- 4 மேசைக்கரண்டி
4. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
6. சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி
7. கேசரிப் பொடி – சிறிது
8. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை – சிறிது
10. எண்ணெய் – தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வெங்காயத்தை நீளவாக்கிலும், மற்றொரு வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
2. பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. அரிசி மாவு,கோதுமை மாவு, கடலை மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கலக்கவும்.
4. கலக்கிய மாவுடன் சோடா உப்பு, கேசரிப் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
5. இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பிசறி விடவும்.
6. பிசறிய மாவுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து வடையாக உருட்டி போடும் அளவிற்கு மாவைப் பிசைந்து கொள்ளவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடையாக உருட்டிப் போட்டுப் பொறித்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.