வெஜிடபிள் போண்டா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கப்
2. சோடா உப்பு - 1 சிட்டிகை
3. எண்ணெய் - தேவையான அளவு
4. உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்ய
5. உருளைக் கிழங்கு - 1 எண்ணம்
6. கேரட் - 1 எண்ணம்
7. பீன்ஸ் - 4 எண்ணம்
8. பச்சைப் பட்டாணி - 50 கிராம்
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
11. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
12. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
13. எலுமிச்சம்பழச் சாறு - 1 மேசைக்கரண்டி
14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
15. மல்லித்தழை - சிறிது
16. எண்ணெய் - சிறிது.
செய்முறை:
1. காய்கறிகள் அனைத்தையும் மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் அனைத்துக் காய்கறிகளையும் போட்டு அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான நெருப்பில் வதக்கவும்.
5. காய்கறிகள் பாதியளவு வெந்ததும், அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
6. காய்கறிகள் வெந்ததும், அதில் கரம் மசாலாத் தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
7. காய்கறி மசாலா ஆறியதும் அதைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
8. கடலை மாவுடன் உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், காய்கறி உருண்டைகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து, காயும் எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாகப் பொறித்தெடுக்கவும்..
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.