சோமாஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 1 கப்
2. ரவை - 1/4 கப்
3. சர்க்கரை - 1/4 கப்
4. வறுகடலை - 1/4 கப்
5. தேங்காய் - 1/2 மூடி
6. ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
7. நெய் - 2 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வறுகடலையைப் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
2. தேங்காயைத் துருவி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கி வைக்கவும்.
4. மைதா மாவிவுடன் ரவை, உப்பு சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
5. இந்த மாவை ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
6. வறுகடலை மாவுடன், சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாகச் செய்து கொள்ளவும்.
7. ஈரத்துணியில் சுற்றிய மாவை எடுத்து, சிறுசிறு சப்பாத்திகளாக இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி சோமாஸாக செய்து வைக்கவும்.
8. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அந்த எண்ணெயில் சோமாஸ்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.