வெஜிடபிள் வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உளுந்தம் பருப்பு - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 100 கிராம் (உரித்தது)
3. மிளகாய் - 6 எண்ணம்
4. காரட் - 50 கிராம் (துருவியது)
5. கோஸ் - 50 கிராம் (துருவியது)
6. பீட்ரூட் - 50 கிராம் (துருவியது)
7. இஞ்சி - சிறிது
8. கருவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. ந.எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைத்து கெட்டியாகவும் மிருதுவாகவும் அரைக்கவும்.
2. இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை மற்றும் மல்லித்தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அரைத்த மாவுடன் துருவி வைத்த காரட், கோஸ், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் நறுக்கி வைத்த இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துப் பிசையவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.