ஜவ்வரிசி – கீரை வடை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாவு ஜவ்வரிசி – 1 கப்
2. பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்
3. அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
4. அரைக்கீரை – 1/2 கப் (நறுக்கியது)
5. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
7. சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை – சிறிது
9. எண்ணெய் – தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு கடாயை சூடாக்கி, ஜவ்வரிசியை சேர்த்து நன்றாகப் பொரியும் வரை வறுத்து எடுக்கவும்.
2. வறுத்த ஜவ்வரிசியைத் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கீரை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.