உளுந்து போண்டா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உளுத்தம் பருப்பு - 1 கப்
2. அரிசி - 1 மேசைக்கரண்டி
3. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
4. தேங்காய் - 2 துண்டு
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - சிறிது
7. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
8. கருவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி ஆகியவற்றைச் சிறிது நேரம் ஊறவைத்து அரைக்கவும்.
2. அரைத்து முடிக்கும் போது மிளகைச் சேர்த்து ஒரு முறை அரைக்கவும்.
3. உப்பு மற்றும் சோடாஉப்பைச் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் கலக்கவும்.
4. தேங்காயைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
5. கருவேப்பிலையைச் சிறிதாக நறுக்கிச் சேர்க்கவும்.
6. மாவை நன்கு பிசைந்து சிறிது தளர்த்தி இருக்கட்டும்.
7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மாவைப் உருண்டையாகப் போட்டுப் பொறித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.