கத்தரிக்காய் பஜ்ஜி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் – 250 கிராம்
2. கடலைமாவு – 1/2 கப்
3. அரிசிமாவு – 1 மேசைக்கரண்டி
4. சோள மாவு – 1 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
7. சோடா உப்பு – 1 சிட்டிகை
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காயை வட்டமாகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கடலைமாவு, அரிசிமாவு, சோள மாவு, உப்பு, சோடா உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய்யைக் காயவைத்து, அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து மாவில் ஊற்றிக் கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும்.
4. கரைத்த மாவில் கத்தரிக்காய் வில்லைகளைத் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.