கொள்ளு வடை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு - 250 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிள்காய் - 3 எண்ணம்
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. அரிசி மாவு - 1 கைப்பிடியளவு
6. மல்லித்தழை - சிறிது
7. கருவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கொள்ளுவைச் சில மணி நேரங்கள் ஊறவிட்டுச் சிறிது சொரசொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், மிளகாய், சோம்பு, மல்லித்தழை, கருவேப்பிலை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, வடை பதத்திற்கு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மசால் வடைபோல் தட்டிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.