தூள் பஜ்ஜி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 100 கிராம்
2. கார்ன் ப்ளார் - 2 தேக்கரண்டி
3. வெங்காயம் - 1/4 கிலோ
4. இஞ்சி - சிறிது
5. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
6. பூண்டு - 5 பல்
7. உப்பு - தேவையான அளவு
8. கேசரி கலர் பொடி - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தை நீளவாக்கிலும், மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சிறிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு, கேசரி கலர் பொடி மற்றும் உப்பைப் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
3. நறுக்கி வைத்த இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும்.
4. அரைத்த விழுதை மாவு கலவையுடன் போட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.
5. ஒரு வாணலி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகப் போட்டு, இருபுறமும் மொறு மொறுப்பாக வேகவிட்டு எண்ணெய் வடித்து விட்டு எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.