மசால் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை பருப்பு - 1கப்
2. வெங்காயம் (நறுக்கியது) - 1கப்
3. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
4. இஞ்சி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
5. கருவேப்பிலை - சிறிது
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கடலைப் பருப்பை 2மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
2. ஊறிய பருப்பைத் தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைக்கவும்.
3. அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
5. காய்ந்த எண்ணெய்யில் மாவுக்கலவையை எலுமிச்சை அளவு சிறு உருண்டையாக உருட்டி லேசாகத் தட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.