மெது வடை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உளுந்து -1 கப்
2. பச்சரிசி மாவு -1 மேசைக்கரண்டி
3. சீரகம் -1 தேக்கரண்டி
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 3 தேக்கரண்டி
6. காரட் (துருவல்) - 1 தேக்கரண்டி
7. கோஸ் (துருவல்) - 2 தேக்கரண்டி
8. மல்லித்தழை (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
9. கருவேப்பிலை (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
10. உப்பு-தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தைக் களைந்து தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற விடவும்.
2. ஊறிய உளுந்தைத் தண்ணீர் விடாமல் நன்றாகப் பொங்கி வரும் வரை அரைத்து எடுக்கவும்.
3. உளுந்த மாவுடன் பச்சரிசி மாவு, சீரகம், மிளகு, மல்லித்தழை, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், காரட், கோஸ், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான நெருப்பில் வைக்கவும்.
5. பாலிதீன் பேப்பர் அல்லது இலையில் எண்ணெய் தடவி, அதில் கொஞ்ம் வடை மாவை வைத்துத் தட்டித் துளையிட்டு, இருபுறமும் புரட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.