பாலக், உருளைக்கிழங்கு பஜ்ஜி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. பாலக் இலை - 6 எண்ணம்
5. கடலை மாவு - 5 மேசைக்கரண்டி
6. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
7. கரம் மசாலா பவுடர்- 1 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
9. டூத்பிக் அல்லது குச்சி - 6 எண்ணம்
10. மல்லித்தழை - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மசியல், மல்லித்தழை, கரம் மசாலா பவுடர், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ளவும்.
5. பாலக் இலையை நன்கு கழுவி, அந்த இலையின் மேல் ஒரு மேஜைக்கரண்டி பச்சி மாவைப் பரப்பி இலையை நீள வாக்கில் மடிக்கவும். அதன் மேலும் பச்சி மாவைச் சிறிது பரப்பிப் பிசைந்த உருளைக் கலவையிலிருந்து சிறிது எடுத்து உருட்டி பாலக் இலையின் மேல் வைத்து சுருட்டி, அதன் நுனியில் குச்சியால் குத்தி வைக்கவும். (இதனால் உள்ளிருக்கும் மசாலா வெளியில் வராது)
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், குச்சி குத்திய பாலக் உருளையை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொறிக்கவும்..
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.