காலிபிளவர் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் – 1 எண்ணம்
2. கடலை மாவு – 2 கரண்டி
3. கசகசா – 1/4 தேக்கரண்டி
4. மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. மல்லித்தழை – சிறிது
7. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. காலிபிளவரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. மல்லித்தழை, மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பொடியாக நறுக்கிய காலிபிளவர் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
4. இன்னொரு பாத்திரத்தில் வேகவைத்த காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, மல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாகக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் காலிஃபிளவரைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.