வெங்காயத் தூள் பக்கோடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
2. கடலை மாவு - 1/2 கப்
3. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை - சிறிது
6. பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - சிறிது
7. உப்பு - - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்துடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைத் தெளித்துப் பிசைந்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த கலவையை நன்றாக கைகளால் உதிர்த்துப் போட்டு உதிரியான பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.