உருளைக்கிழங்கு போண்டா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு – 4 எண்ணம்
2. பாசிப்பருப்பு – 1/4 கப்
3. அரிசி மாவு (வறுத்தது) – 3 கரண்டி
4. வெங்காயம் – 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் -2 எண்ணம்
6. இஞ்சி – சிறிய துண்டு
7. சீரகம் – 1 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
9. மல்லித்தழை – சிறிது
10. எண்ணெய் – தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை எடுத்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இஞ்சியைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
4. பாசிப்பருப்பை நன்றாக ஊற வைத்து, கழுவி மிக்கியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் அரைத்த பாசிப்பருப்பு, மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, அரிசி மாவு, மல்லித்தழை, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பதமாகக் கலந்து சிறிய உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.
குறிப்பு: உருளைக்கிழங்கு போண்டாவை மாலை நேரத்தில் புதினா சட்னி, தேங்காய் சட்னியோடு சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.