முள்ளங்கி வடை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நூடுல்ஸ் - 200 கிராம்
2. மைதா மாவு - 2 கப்
3. வெங்காயம் -1 எண்ணம் (நறுக்கிக் கொள்ளவும்)
4. பூண்டு - 8 பற்கள்
5. கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், குடமிளகாய் நறுக்கியது - 1 கப்
6. தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
7. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, அதில் எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் படி நூடுல்ஸை வேகவைத்து, காய்கறிகளை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
4. மைதா மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.
5. பிறகு மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்த்து இரண்டாக நறுக்கவும்.
6. ஒவ்வொரு அரை பாகத்தின் நடுவிலும் சிறிதளவு நூடுல்ஸ் கலவையை வைத்து முக்கோணமாக மடித்து ஓரங்களை அழுத்தி ஒட்டவும்.
7. வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுச் செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
8. தேவையான சாஸ் உடன் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.