பச்சைப்பயறு வடை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சைப்பயறு - 1 கப்
2. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
3. இஞ்சி - 1 சிறிய துண்டு
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. வெங்காயம் - 1 எண்ணம்
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லி இலை - சிறிது
செய்முறை:
1. பச்சைப்பயறை நன்கு கழுவி, தண்ணீரில் பத்து மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. மிக்ஸியில் பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, அத்துடன் கல் உப்பு, ஊற வைத்து வைத்துள்ள பச்சைப் பயிரையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து வடை போல் தட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு, ஒரு புறம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.