தவல வடை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
2. புழுங்கல் அரிசி - 1 மேசைக்கரண்டி
3. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
5. பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
6. உருட்டு உளுந்து - 1 மேசைக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
8. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
9. வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
10. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
13. இஞ்சி - சிறிய துண்டு
14. உப்பு - தேவையான அளவு
15. எண்ணெய் - பொறிப்பதற்குத் தேவையானஅளவு
தாளிக்க:
16. கடுகு - 1/2 தேக்கரண்டி
17. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
18. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. அரிசி, பருப்பை தண்ணீர் விட்டு அரைமணி நேரம் முதல் நாற்பது நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
2. மிக்சியில் தண்ணீரை வடித்து விட்டு உப்பு பெருங்காயம் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.
3. மாவைக் கரண்டியால் எடுத்து விடும் பதத்திற்கு வைக்கவும்.
4. தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து, அதனைச் சேர்க்கவும். வெங்காயம், மல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
5. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கரண்டியால் மாவை எண்ணெய்யில் விடவும்.
6. வடையைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:தேங்காய் சட்னியோடு சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.