பலாக்கொட்டை வடை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பலாக்கொட்டை - 1/2 கோப்பை
2. கடலைப்பருப்பு - 1 கோப்பை
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. மிளகுப் பொடி - 1 கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு
7. பெருங்காயப்பொடி - சிறிது
செய்முறை:
1. கடலைப் பருப்பை ஊற வைத்து அரைக்கவும்.
2. பலாக் கொட்டைகளை வேக வைத்துத் தோல் நீக்கி மசிக்கவும்.
3. இரண்டையும் கலந்து உப்பு, பெருங்காயப் பொடி, மிளகுப் பொடி சேர்த்துப் பிசையவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மாவை வடைகளாகத் தட்டிப் போடவும்.
5. ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பிப் போட்டு, வேகவைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.