நூடுல்ஸ் பன்னீர் பக்கோடா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. நூடுல்ஸ் - 200 கிராம்
2. ரவை - 2 தேக்கரண்டி
3. சோள மாவு - 2 தேக்கரண்டி
4. வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கோப்பை
5. குடை மிளகாய் - 1 எண்ணம்
6. முட்டைக்கோஸ் (நறுக்கியது) - 1 கோப்பை
7. பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. மல்லித்தழை - சிறிது
9. பாலாடைக்கட்டி (நறுக்கியது) - 1/2 கோப்பை
10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 3 கோப்பை தண்ணீர் வைத்துக் கொதிக்க வைக்கவும்.
2. தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ், மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. நூடுல்ஸ் சமைத்து, அதன் பின் ஆற வைக்கவும்.
4. அதனுடன், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடை மிளகாய், மல்லித்தழை, மிளகாய்த் தூள், ரவை, பூண்டு விழுது, பாலாடைக்கட்டி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
5. அதன் பிறகு, அந்தக் கலவையில் சோள மாவு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்துப் பக்கோடாவுக்கு ஏற்றதாகப் பிசைந்து வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும்.
7. எண்ணெய் சூடாக இருக்கும் போது, பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறிய பக்கோடா அளவில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: இந்தப் பக்கோடாவை சாதாரணமாகச் சாப்பிடலாம். தக்காளிச் சாறு (சாஸ்), மல்லிச் சாறு (சாஸ்) தேவைப்படுபவர்கள், அதனை ஊற்றிச் சாப்பிடலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.