வெங்காய சமோசா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மைதா - 3 கோப்பை
2. வெங்காயம் (நறுக்கியது) - 1 1/2 கோப்பை
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி
5. மல்லித்தூள் - 1/4 மேசைக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
7. கரம் மசாலாத் தூள் - 1/4 மேசைக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. நெய் - 2 மேசைக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3. பின்னர் அதனுடன், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து, நெருப்பைக் குறைத்து வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வைக்கவும்.
4. பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து வைக்கவும்.
5. வட்டமாகத் தேய்த்து வைத்த மாவை இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையைச் சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
6. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தயரித்து வைத்திருக்கும் சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.