மங்களூர் போண்டா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 1 கோப்பை
2. சற்று புளித்த தயிர் - 1 கோப்பை
3. சோடா உப்பு - 1 சிட்டிகை
4. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. மிளகு - 1 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
2. அத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாகக் கரைக்கவும்.
4. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
5. நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக, சிவக்க வேக விட்டெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.