அவல் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கோப்பை
2. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
3. தயிர் - 1 மேசைக்கரண்டி
4. வெங்காயம் - 2 எண்ணம்
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. இஞ்சி - 1/2 தேக்கரண்டி
7 பச்சை மிளகாய் - 1 எண்ணம்
8. மல்லித்தழை - சிறிது
9. கறிவேப்பிலை - சிறிது
10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் அவலை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும்.
2. பின் அதில் அரிசி மாவு, தயிர், சீரகம் சேர்க்கவும்.
3. அத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
4. அதில் மிளகாய்த் தூள் மற்றும் உப்பு தண்ணீர் சேர்த்து, உருண்டைகளாக வரும் பதத்தில் பிரட்டிக் கொள்ளவும்.
5. சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வடை போன்று தட்டையாகத் தட்டிக் கொள்ளவும்.
6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.