காளான் வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 200 கிராம்
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. மைதா மாவு - 50 கிராம்
8. கார்ன் ப்ளவர் - 25 கிராம்
9. பிரெட் தூள் - 125 கிராம்
10. நிலக்கடலை பருப்பு - 50 கிராம்
11. முந்திரிப்பருப்பு - 25 கிராம்
12. வறுத்த கடலைப்பருப்பு - 50 கிராம்
13. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
14. கறிவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
16. எண்ணெய் - தேவையான அளவு
17. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. காளானைப் பூவாக நறுக்கி இலேசான சுடுநீரில் அலசித் தனியே வைக்கவும்.
2. மைதா மாவு, சோள மாவு இரண்டையும் தண்ணீர் விட்டுக் கலந்து தனியாக வைக்கவும்.
3. நிலக்கடலை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிதமாக வறுத்துத் தூளாக்கி தனியாக வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், காளான், வறுத்துப் பொடித்த தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
6. சூடு ஆறியதும் அதை உருண்டையாக உருட்டி வைக்கவும்.
7. இந்த உருண்டைகளைச் மைதா மற்றும் சோள மாவு கலந்த கலவையில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் லேசாகப் புரட்டி எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.