கீரை வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உளுத்தம்பருப்பு – 200 கிராம்
2. முளைக்கீரை – கைப்பிடி அளவு (நறுக்கியது)
3. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
4. எண்ணெய் – 200 கிராம்
5. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. உளுத்தம் பருப்பைச் சிறிது நேரம் ஊற வைத்து, அதில் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
2. நறுக்கிய கீரையை, மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.