வெங்காயப் பஜ்ஜி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1/4 கிலோ
2. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
3. பெரிய வெங்காயம் - 4 எண்ணம்
4. மிளகாய்த் தூள் - 1 மேசைக் கரண்டி
5. கேசரி பவுடர் - நிறத் தேவைக்கேற்ப
6. பெருங்காயம் - 1/4 மேசைக்கரண்டி
7. எண்ணெய் - 300 கிராம்
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடலை மாவில் தண்ணீர் ஊற்றிக் குழைவாகப் பிசைந்து கொள்ளவும்.
2. இதில் அரிசி மாவு, மிளகாய்த்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
3. வெங்காயத்தை தோலுரித்து வட்டமாகச் சீவித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீவிய வெங்காயத்தை ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.
5. பஜ்ஜி வெந்தவுடன் எடுத்து எண்ணெய் வடிகட்டும் தட்டில் போட்டு, எண்ணெய் வடிந்ததும் தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.
குறிப்பு: 1. மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை உடனடியாகச் சுட்டு எடுக்க வேண்டும், காலதாமதமானால் பஜ்ஜி எண்ணெயைக் குடித்து எண்ணெய் மயமாகிவிடும்.
2. உருளை, கத்தரிக்காய், குடை மிளகாய் என்று விரும்பும் காயையும், அப்பளம் போன்றவற்றையும் பஜ்ஜிக்குப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.